தலைப்புச் செய்தி

Sunday, September 5, 2010

உலகம்டோனி பிளேர் மீது முட்டை வீச்சு

லண்டன், செப்.4: அயர்லாந்தின் டப்ளின் நகருக்குச் சென்ற பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.


ஆனால் முட்டையோ, ஷூவோ அவர் மீது படவில்லை. டோனி பிளேர், பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுடன் இணைந்து இராக்கில் போரை நடத்தியது உள்ளிட்ட தனது நினைவுகளை தொகுத்து "மை ஜர்னி' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்காக அயர்லாந்தின் டப்ளினில் உள்ள புத்தக கடைக்கு டோனி பிளேர் சனிக்கிழமை வந்தார். இராக்போருக்கு எதிரானவர்கள் டோனி பிளேரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தகக் கடையின் இருபுறமும் திரண்டிருந்தனர்.


பிளேர் காரில் வந்திறங்கியதும் போராட்டக்காரர்கள் அவர் மீது முட்டை மற்றும் ஷூவை வீசினர். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக கடைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உலகம்டோனி பிளேர் மீது முட்டை வீச்சு"

Post a Comment