தலைப்புச் செய்தி

Tuesday, September 14, 2010

என்ன தவறு செய்தேன் எடியூரப்பா கண்ணீர்

பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு சாதனை விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் முதல்வர் எடியூரப்பா அழுதார்.
கர்நாடகாவில் பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு விழா பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதல்வர் எடியூரப்பா துவக்கம் முதலே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் மோட்டம்மா ஆகிய காங்கிரஸ் தலைவர்களுக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் விழாவை புறக்கணித்தனர்.

அந்த வேதனை எடியூரப்பாவின் பேச்சில் எதிரொலித்தது. விழாவில் தழுதழுக்க அவர் பேசியதாவது: சாதாரண விவசாயி மகனான என்னை மக்கள் ஆதரவு அளித்து முதல்வராக்கி உள்ளனர். அதனால், விவசாயிகளுக்கு என்றுமே நான் துரோகம் செய்ய மாட்டேன். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய காங்கிரசார், சமீபத்தில் பதவிக்கு வந்த பா.ஜ.வை விமர்சனம் செய்கின்றனர். விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டியவர்கள் அவர்கள்தான்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "என்ன தவறு செய்தேன் எடியூரப்பா கண்ணீர்"

Post a Comment