அமெரிக்காவில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை நிலவிய சூழ்நிலையில், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் செய்த முதலீடுகள் அமெரிக்க பொருளாதாரம் மீண்டுவர பேருதவியாக இருந்ததை மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2004-2009-ம் ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் ரூ.96 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளன. கடந்த 2008-ல் மட்டும் ரூ.20 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன. 2009-ல் இந்த முதலீடு 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதன்மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளை இந்திய நிறுவனங்கள் இங்கு ஏற்படுத்தி உள்ளன என்று ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான வர்த்தகத்துறை உதவி துணை அமைச்சர் ஹோலி வினெயர்டு தெரிவித்தார்.
0 comments: on "அமெரிக்காவில் அன்னிய முதலீடு - இந்தியாவுக்கு 3-ம் இடம்"
Post a Comment