முஷாபர்நகர்: அயாத்தி தீர்ப்பு 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது, இதனையொட்டி உத்திரபிரதேசத்தில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட உள்ளது அம்மாநில அரசு. உத்திரபிரதேசத்தில் சர்ச்சைக்குரிய அயாத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக வரும் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பால் அங்கு கலவரம், ஆர்ப்பாட்டம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனையொட்டி அம்மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அம்மாநிலத்தில் தற்காலிக சிறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆண், பெண் என இருவருக்கு தனித்தனியாக சிறை அமைக்கப்பட உள்ளது. இதனை சிறைத்துறை டி.ஐ.ஜி., ஏ.கே.பாண்டே தெரிவித்தார்.
0 comments: on "அயோத்தி தீர்ப்பு: உ.பி.,யில் தற்காலிக சிறைகள் அமைக்கும் பணி தீவிரம்"
Post a Comment