தலைப்புச் செய்தி

Thursday, September 16, 2010

புர்காவிற்கு தடை:மசோதாவை நிறைவேற்றியது பிரான்சு பாராளுமன்றம்

பாரிஸ்,செப்.16:பிரான்சு நாட்டு பாராளுமன்றமான செனட் புர்காவை தடைச்செய்யக் கோரும் மசோதாவை நிறைவேற்றியது.

இம்மசோதாவிற்கு ஆதரவாக 249 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன. இதன் மூலம் பிரான்சில் இனி பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத்தடை அமுலுக்கு வரும்.

ஐரோப்பாவில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பிரான்சு முதலிடத்தை வகிக்கிறது. இங்கு முஸ்லிம்கள் இரண்டாவது பெரிய மதப்பிரிவினர் ஆவர். மதசுதந்திரம் இன்னும் சில பழுதுகளை பயன்படுத்தி இம்மசோதாவிற்கு எதிரான வாதங்களை எதிர்கொள்ளும் விதமாக மிக சாமர்த்தியமான முறையில் இம்மசோதாவில் சில பிரிவுகள் உட்படுத்தப்பட்டுள்ளன.

மசோதாவின் ஏழு பிரிவுகளில் ஒரு இடத்தில் கூட முஸ்லிம், பர்தா, பெண் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. கடந்த ஜூலையில் பிரான்சு பாராளுமன்றத்தின் நேசனல் அசெம்ப்ளி இம்மசோதாவிற்கு அங்கீகாரம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதரீதியாக முகத்தை மறைப்பது பிரான்சு காத்துவரும் மதசார்பற்றத் தன்மைக்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானது என சுட்டிக்காட்டித்தான் பிரான்சு அரசு புர்கா அணிய தடை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பிரான்சு அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு விரும்பினால் இதர நாடுகளில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதுபோல் பிரான்சிலும் அத்தகைய சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும் என இந்தோனேசியாவின் உயர் முஸ்லிம் சபையான இந்தோனேசியன் உலமா கவுன்சில் கூறியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "புர்காவிற்கு தடை:மசோதாவை நிறைவேற்றியது பிரான்சு பாராளுமன்றம்"

Post a Comment