தலைப்புச் செய்தி

Thursday, September 2, 2010

நடத்திய கலவரம் இரண்டாவது ஆண்டு நிறைவு.

புதுடெல்லி,ஆக25:ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது சங்க்பரிவார் நடத்திய கலவரம் திட்டமிடப்பட்டது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது. இரண்டு வருடம் கழிந்த பிறகும் தெளிவான விசாரணை நடத்தவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கிடைக்க வழிவகுக்காதது நீதித்துறைக்கு வெட்ககரமானது என டெல்லி கான்ஸ்ட்டிட்யூசன் க்ளப்பில் மூன்று தினங்களாக நடைபெற்று வந்த நேசன்ல் பீப்பிள்ஸ் ட்ரிப்யூனல் கூறியுள்ளது.



குடியுரிமை மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பான நேசனல் சோலிடாரிட்டி ஃபாரம்(என்.எஸ்.எஃப்) ஏற்பாடுச்செய்த மக்கள் நீதிமன்றத்தில் கந்தமால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 43 பேர் தங்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவங்களை விவரித்தனர்.கலவரம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்லமுடியாத பீதியான சூழலில் தான் கந்தமாலில் உள்ளது.

மக்களுக்கு நிம்மதியான வாழ்வும்,தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும்,பூரணமான விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்றும், மன்றம் வலியுறுத்தியுள்ளது.கந்தமால் நினைவுத்தினமான இன்று பாராளுமன்றத்தின் முன்னால் கண்டனப் பேரணி நடத்தி பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அளிக்கப்படும்.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், பா.ஜ.கவினர்கள்தான் கலவரத்தை நடத்தியது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது.கந்தமால் மாவட்டத்தில் மட்டும் 600 கிராமங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டன. 5600 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 30 ஆயிரம் கிறிஸ்தவர்கள் மற்றும் ஆதிவாசிகள் பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஏராளமானோருக்கு காயமும் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். 295 சர்ச்சுகளும், 13 பள்ளிக்கூடங்களும் தகர்க்கப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் படிப்பிற்கு தடை ஏற்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான எ.பி.ஷா மக்கள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். ஹர்ஷ் மந்தர், மகேஷ் பட், மிலூன் கோத்தோரி, அட்மிரல் விஷ்ணு பாகவத், பி.எஸ்.கிருஷ்ணன், ரபிதாஸ், ரூத் மனோரமா, சுகுமார் முரளீதரன், ஸயீதா ஹமீத், வாஹிதா நைநார், ப்ருந்தா க்ரோவர் ஆகியோர் நீதிபதி அங்கங்களாக அமர்ந்திருந்தனர். சட்டவல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட 250 பேர் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நடத்திய கலவரம் இரண்டாவது ஆண்டு நிறைவு."

Post a Comment