தலைப்புச் செய்தி

Sunday, September 19, 2010

பாகிஸ்தான் அரசியல் தலைவர் லண்டனில் கொலை

லண்டன், செப். 17: பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் இம்ரான் பாரூக் (50) லண்டனில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
 
பாகிஸ்தானின் 4-வது பெரிய அரசியல் கட்சியான "முக்தாஹிதா குவாமி மூவ்மெண்ட்' (ஐக்கிய தேசிய இயக்கம்) கட்சியின் பொதுச் செயலரான அவர், வடக்கு லண்டனில் வசித்து வந்தார். தலையில் பலத்த காயங்கள் மற்றும் கத்திக் குத்து காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார்.
 
அவரது மரணம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி நகரில் வெள்ளிக்கிழமை அனைத்து வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
 
பாகிஸ்தான் ராணுவத்தால் உயிருக்கு ஆபத்து நேரிட்ட நிலையில் 1992-ல் பிரிட்டனில் தஞ்சமடைந்த இம்ரான் பாரூக், தொடர்ந்து அங்கு வசித்து வந்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாகிஸ்தான் அரசியல் தலைவர் லண்டனில் கொலை"

Post a Comment