தலைப்புச் செய்தி

Thursday, September 2, 2010

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு

பெங்களூர்,செப்.2:வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்ததற்கும், 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியை உட்படுத்தியதற்கும் மத்திய அரசினை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.


வெளிநாட்டு இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதுக் குறித்த மசோதா அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிநாட்டிலிருந்துக் கொண்டு இணையதளம் வாயிலாக வாக்களிக்கும் முறையைக் குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி கூறியிருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என பாப்புலர் ப்ரண்டின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பிறகு தேசம் மேற்கொண்ட தீரமான முடிவுதான் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு. வளர்ச்சித் திட்டங்களுக்கும், வளங்களை பங்கீடுச் செய்வதிலும் நீதியை நடைமுறைப்படுத்த முழுமையான தகவல்கள் இதன்மூலம் கிடைக்கும்.

பயோமெட்ரிக் சர்வேயுடன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை கலக்காமல் தனியாக சர்வே நடத்தினால்தான் அது பயன் தரத்தக்கதாக மாறும் என ஷெரீஃப் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு"

Post a Comment