ஜெய்ப்பூர்,செப். ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய வெடிப்பொருள் கிட்டங்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
ராஜஸ்தான் வெடிபொருள் கிட்டங்கியில் வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரிகளில் 61 லாரிகளை காணவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதில் சில லாரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற லாரிகள் எப்படி மாயமாயின என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்த நிலையில் மேலும் 103 லாரிகள் வெடிப்பொருட்களுடன் மாயமாகிவிட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த 103 லாரிகளிலும் சுமார் 450 டன் எடை கொண்ட வெடிபொருட்கள் இருந்தன.
103 வெடி பொருள் லாரிகள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை. இந்த 103 லாரிகளும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேரவில்லை. இந்த 103 லாரிகளையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Source :பாலைவனதூது
0 comments: on "வெடிப்பொருட்கள் ஏற்றிச் சென்ற 103 லாரிகள் மாயம்"
Post a Comment