லக்னோ: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் இறுதி தீர்ப்பு கூறப்படவிருக்கும் வரும் 24ஆம் தேதி பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களை நீதிமன்ற வளாகத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.
நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் சேர்ப்பதையும் அதனால் பதற்றம் ஏற்படுவதையும் தவிர்க்கவும் இதர மனுதாரர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் தங்களுடைய பணிகளைச் செய்ய இடையூறு நேராமல் இருக்கவும் இந்த முடிவை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எடுத்திருக்கிறார்.
அதே சமயம், பத்திரிகை செய்தியாளர்களும் தொலைக்காட்சி செய்தியாளர்களும் நீதிமன்றத் தீர்ப்பின் நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டிருக்கிறது. இதை மாவட்ட ஆட்சியர் அனில்குமார் சாகர் லக்னோவில் தெரிவித்தார். தீர்ப்பின் புகைப்பட நகல் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு கூறப்படும் நீதிமன்றக் கூடத்தில் வாதி, பிரதிவாதிகள் அவர்களுடைய வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அப்போது தீர்ப்பை வழங்கும். நீதிமன்ற வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும். வேண்டாத நபர்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
0 comments: on "அயோத்தி தீர்ப்பு: செய்தியாளர்களுக்கு நோ அட்மிஷன்"
Post a Comment