பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றக் காவலர் சுட்டதில் 32 வயது பாலஸ்தீனர் ஒருவர் பரி்தாபமாக கொல்லப்பட்டார். கிழக்கு ஜெருசலத்தில் உள்ள சில்வான் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்ரேலியக் காவல்துறையைச் சார்ந்த ஒருவர் கூறும்போது அந்தக் காவலர் செல்லும்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கற்களினால் தாக்கும்போது சுட நேர்ந்தது என குறிப்பிட்டுள்ளார். கொலை செய்த காவலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துவிட்டு தொல்லியல் பூங்கா ஒன்றை அமைக்க இஸ்ரேல் முயற்சித்து வருவதை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
20 மாத இடைவெளிக்கு பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் சமாதான பேச்சு வார்த்தையை கடந்த 2 ம்திகதிதான் ஆரம்பித்துள்ளது. கிழக்கு ஜெருசலத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகம் சட்ட விரோதமானது எனக் கருதுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிழக்கு ஜெருசலம் முழுமையும் புனித நகரமாக கருதுவதால் அங்குள்ள யூதர்களை குடியேறியவர்கள் எனக் கருதுவதில்லை.
0 comments: on "ஜெருசலத்தில் பதட்டம்"
Post a Comment