இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட வந்த துணை முதல்வர் ஸ்டாலின் குமரியில் தங்கியுள்ளார். அவரை வரவேற்பதற்காக குமரி முழுவதும் திமுக கொடிகள், கட்-அவுட்கள் மற்றும் தட்டி விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தக்கலை பகுதியில் இந்து அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
அப்போது ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதால் சாலையில் வைக்கப்பட்டிருந்த திமுக கொடிகள் கிழித்து எரியபட்டன. கட்-அவுட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அமைச்சர் சுரேஷ்ராஜன் சம்பவ இடத்திற்கு வந்து சேரும்போது அந்த இடம் அமைதியாக இருந்தது. இதனால் மாநாட்டு வேலைகள் முடிந்ததும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கலாம் என்று அமைச்சர் சென்றுவிட்டார்.
இந்நிலையில் கருங்கல் அருகில் உள்ள மிடாலம் பகுதியில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பொழுது அங்கிருந்த மீனவர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் வாக்குவாதம் வந்து பின்னர் அது கைகலப்பில் முடிந்தது. இந்த கலவரத்தில் வீடுகள், பஸ், செல்போன் டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தகவலறிந்ததும் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தற்காலிகமாக கலவரத்தை கட்டுப்படுத்தியுள்ளனர் இன்னும் சில இடங்களில் இப்போதும் பதட்டம் நீடிக்கிறது
0 comments: on "குமரியில் கலவரம்! வீடுகள், பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன"
Post a Comment