வருகிற 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் பாபர் மசூதி நிலப்பிரச்சனை குறித்த வழக்கு மேல் விசாரணைக்காக உச்ச நீதிமன்றம் செல்வது உறுதி என முன்னாள் துணை பிரதமரும் பாஜக தலைவருமான அத்வானி கருத்து கூறியுள்ளார்.
சொக்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டுள்ள குஜராத் முன்னாள் உள்துறை இணையமைச்சர் அமித் ஷாவைச் சிறையில் சென்று பாஜக தலைவர் அத்வானி சந்தித்துப் பேசினார். இதற்காகக் குஜராத் சென்றுள்ள அவரை அஹமதாபாத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
வருகிற 24-ந்தேதி அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி தொடுத்தனர். அதற்கு அத்வானி பதிலளிக்கும் போது,
"பாபர் மசூதி நில வழக்கு தீர்ப்பு குறித்து யூகமாக கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று எங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறேன். தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்த்த பின்னரே எதுவும் கூற இயலும்.
ஆனால் தீர்ப்பு எப்படி இருந்தாலும், இந்த வழக்கு மேல் விசாரணைக்காக உச்ச நீதிமன்றம் செல்வது மட்டும் உறுதி" என்று கூறினார்.
0 comments: on "பாபர் மசூதி வழக்கு உச்சநீதிமன்றம் செல்வது உறுதி - அத்வானி"
Post a Comment