சென்னை: புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் நசீர் அகமது (வயது 55). புளியந்தோப்பில் உள்ள காவல்நிலைய குடியிருப்பில் தங்கி உள்ளார்.
நேற்று இரவு அவர் புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் முதல் தெருவில் உள்ள விநாயகர் சிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென உதவி ஆய்வாளர் நசீர் அகமதுவின் அலறல் சத்தம் கேட்டது இதனை தொடர்ந்து அங்கு குடியிருந்தவர்கள் வீட்டை திறந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது வெட்டு காயங்களுடன் ரத்தம் சொட்ட நசீர் அகமது ஓடிக்கொண்டிருந்தார்.
அவரை அரிவாளுடன் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் விரட்டி சென்றுள்ளது. பொதுமக்களை கண்டவுடன் அந்த மர்மகும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியது.
அதைதொடர்ந்து படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் நசீர் அகமதுவை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தலை, கை, மணிக்கட்டு என உடலில் 7 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்துள்ளது. அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் சிவமணி வழக்குப்பதிவு செய்தார்.

எதற்காக காவல்துறை உதவி ஆய்வாளரை வெட்டினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
0 comments: on "விநாயகர் சிலையால் வினை"
Post a Comment