டெல்லி: உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் காவி பயஙகரவாதம் பற்றி பேசியுள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான எண்ணம் அம்பலமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்று கூறியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிக்கையான பாஞ்சஜன்யாவில் இடம் பெற்றுள்ள தலையங்கம்...
இது வரை ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ள பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய புனிதப் போருக்கு முன் காவியை வைப்பது ஓட்டு
வங்கி அரசியலுக்காக நடக்கும் அரசியல் சதியாகும்.
அன்மையில் நடந்த காவலர்கள் மாநாட்டில் இந்த கருத்தை தெரிவித்திருப்பதன் மூலம் காங்கிரஸின் மனப்பாங்கை சிதம்பரம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 85 சதவீதம் உள்ள இந்துக்கள் இந்த அரசால் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே, ஒருங்கிணைந்த இந்து சக்தியால் மட்டும் தான் தேச விரோத சதிகளை முறியடிக்க முடியும்.
இஸ்லாமிய புனிதப்போரால் ஏராளமான மக்களை கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் பயங்கரவாதத்தை எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துடனும் இணைத்துக் கூறாமல் இருப்பதும் இதே அரசு தான் என் அது கூறியுள்ளது.
Source :தட்ஸ்தமிழ்
0 comments: on "காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது-ஆர்.எஸ்.எஸ்."
Post a Comment