செப்.12:அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு படைகள் ஆஃப்கானில் முகாமிட்டு தாலிபான்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் 5 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
தாலிபான்களை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் அங்கு 3 அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். மேலும் அவர்களின் கால், கைகளின் விரல்களை துண்டித்து கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொடூர கொலை காபூல் மாகாணத்தில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடைபெற்றுள்ளது. மேற்கண்ட தகவலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் கஞ்சா உபயோகித்ததாகவும், ஒழுக்கமற்ற முறையில் பாதகமாக நடந்து கொண்டதாகவும் மற்றும் பல்வேறு வகையில் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, அவர்கள் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட உள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 ராணுவ வீரர்களுக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
0 comments: on "ஆஃப்கனில் 3 பேரை கொன்று விரல்களை துண்டித்த அமெரிக்க வீரர்கள்"
Post a Comment