மதுரை : மதுரை பெத்தானியாபுரம் ஆற்றங்கரை ஓரத்தில் எரிந்த நிலையில் பெண் பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 27 வயது மதிக்கத்தக்க அந்த பெண் காலில் மெட்டி அணிந்துள்ளார். இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். பிணத்தின் அருகே பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டி ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணை கொலை செய்து விட்டு, போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக கொலையாளி பெட்ரோல் கேனை அருகில் போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இது தொடர்பாக கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
0 comments: on "மதுரையில் பெண் எரித்துக் கொலை?"
Post a Comment