கோவை: தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது மிக மிக எளிது என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி .
கோவையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தின்போதுதான் இப்படிப் பேசினார் பிரணாப்.
பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என கேட்கிறார்கள். இந்தியாவில் வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கடனை கொடுத்திருக்கிறோம். இந்தியாவை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதான் இந்தியாவின் வளர்ச்சி.
4 கோடி விவசாயிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ப.சிதம்பரத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயிகளின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி உறுதிமொழி ஒன்றை கொடுத்திருந்தார். அது ஏழைகளுக்கு எப்போதும் உதவ வேண்டும் என்பதையே மக்களுக்கு உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளச் செய்தார். அதைத்தான் நம் காங்கிரசும் செய்துக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 40 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் போய்விட்டது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி செய்கிற நிலை வரவேண்டும். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சியினர் பலம் கொண்டு முன்னெடுக்க வேண்டும்.
ஆட்சியில் தற்போது இல்லையென்றாலும், மக்கள் சேவையில் நாம் எப்போதும் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வருவது மிக மிக எளிதான விஷயம் என்று பேசினார் பிரணாப் முகர்ஜி.
0 comments: on "தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது ரொம்ப ரொம்ப ஈசி-பிரணாப் பேச்சு"
Post a Comment