தம்மை ஒரு முஸ்லிமாகவே ஐந்தில் ஒரு அமெரிக்கர்கள் கருதினாலும் அது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கருத்துக்கணிப்பு நிறுவனமொன்று நடத்திய அண்மைய கருத்துக்கணிப்பில், ஒபாமாவை ஒரு முஸ்லிம் என்றே ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் கருதுவதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தொலைக்காட்சி ஓடை ஒன்றில் பேட்டியளித்த ஒபாமாவிடம் இது குறித்து கேட்டபோது, இந்த கருத்துக்கணிப்பு குறித்து தமக்கு சிறிதும் கவலை இல்லை என்றும், உண்மைகள் தான் உண்மைகளாக இருக்கும் என்றும் பதிலளித்தார். எவ்வளவு பெரிய உண்மை!
தமது மதம் குறித்துள்ள குழப்பத்திற்கு ஊடகங்களில் தவறாக பரப்பப்படும் செய்திகளே காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.
Source : இந்நேரம்
0 comments: on "முஸ்லிமாகக் கருதினாலும் நோ பிராப்ளம்: ஒபாமா"
Post a Comment