லண்டன்,ஆக.29:பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்-சமந்தா தம்பதியினருக்கு 4-வதாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது அழகு மகளை கொஞ்சுவதற்கு கேமரூன் இருவாரம் விடுப்பு எடுக்கவுள்ளார்.
பிரிட்டனில் பிரதமராக உள்ளவர்களுக்கு குழந்தை பிறந்தால் சம்பளத்துடன் இருவாரம் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.இதனால் இந்த வாய்ப்பை கேமரூன் நழுவவிட விரும்பவில்லை.மகளை கொஞ்சுவதற்காக தனது அனைத்து பணியையும் ஒதுக்கிவைக்க முடிவெடுத்துவிட்டார் கேமரூன்.
இங்கிலாந்தின் மேற்கு பகுதி நகரான ட்ருரோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கேமரூனின் மனைவி சமந்தா பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார்.அவருக்கு வியாழக்கிழமை அழகான பெண் குழந்தை பிறந்தது.
2.7 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தைக்கு பிளாரன்ஸ் ரோஸ் என்டெலியன் என்று பெயரிட்டுள்ளனர்.
சமந்தா வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டார். கடந்த மூன்று தினங்களாக கேமரூனுக்கு அலுவல் பணி அதிகமாக இருந்ததால் தனது செல்ல மகளுடன் அவரால் நேரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. திங்கள்கிழமை அவர் தனது மகளுடன் முழு நேரத்தையும் செலவிட்டார்.
மகள் பிறந்த பூரிப்பில் உள்ள கேமரூன், இன்னும் இரு வாரங்கள் வரை பத்திரிகையாளர்களை சந்திப்பதுகூட சந்தேகம்தான் என்று அந்நாட்டு பத்திரிகையாளர்கள் பேசிக்கொள்கின்றனர்.
Source : Dinamani
0 comments: on "குழந்தையைக் கொஞ்ச கேமரூன் 2 வாரம் விடுப்பு"
Post a Comment