தலைப்புச் செய்தி

Monday, November 19, 2012

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பினார்.


விண்வெளியில் ஈடுபட்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் விண்கலம் மூலமாக  பூமிக்குத் திரும்பினார்.

விண்வெளியிலிருந்து பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்கடந்த ஜூலை மாதம் 15ஆம் நாள்  ரஷ்யாவின் சார்பில் சோயூஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் சார்பில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்ய, ஜப்பானிய வீரர்கள் இதில் பயணித்தனர்.
பூமிக்கு மேல், 410 கிலோ மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்த விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த விண்வெளி நிலையம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா முதலிய பல நாடுகளின் கூட்டு முயற்சியாகும்.

இந்த விண்வெளி ஆய்வுக்காக அமெரிக்கத் தரப்பில் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் சென்றிருந்தார். சுமார் 127 நாள்கள் ஆய்வு செய்து முடித்து விண்கலம் மூலமாக சுனிதா வில்லியம்ஸ் உட்பட ரஷ்ய, ஜப்பான் ஆய்வாளர்களும்  புவிக்குத் திரும்பினர். கஜகாஸ்தான் நாட்டில் அவர்கள் பத்திரமாகத் தரையிறங்கின
ர்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பினார்."

Post a Comment