தலைப்புச் செய்தி

Thursday, November 22, 2012

அஃப்ஸல் குருவின் கருணை மனு: குடியரசு தலைவர் திருப்பி அனுப்பினார்!


புதுடெல்லி:பாராளுமன்றத் தாக்குதலில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில்  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்ஸல் குரு உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்கும் உள்துறை அமைச்சருக்கு குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக காத்திருக்கும் கருணை மனுக்களை அனுப்பி கொடுப்பது வழக்கமான நடவடிக்கை என்று குடியரசு தலைவர் மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் முதல் தேதி ஷிண்டே பதவியேற்ற உடனேயே அஃப்ஸல் குரு உள்ளிட்ட கருணை மனுக்கள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிக் கொடுக்கப்பட்டன. அந்தந்த மாநில அரசுகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசுகள் உள்ளிட்ட 7 கருணை மனுக்கள் குடியரசு தலைவருக்கு கிடைத்துள்ளன. மரணத்தண்டனையை குறைக்கக் கோரி அஃப்ஸல் குருவின் மனைவி சமர்ப்பித்த கருணை மனுவை தள்ளுபடிச் செய்யவேண்டும் என்று டெல்லி அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் சிபாரிசுச் செய்திருந்தன. ஆனால், அஃப்ஸல் குருவின் ஃபைல் கிடைத்தால் 48 மணி நேரங்களுக்குள் முடிவெடுப்பேன் என்று உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஊடகங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.
2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த பாராளுமன்றத் தாக்குதலில் 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அஃப்ஸல் குருவிற்கு மரணத்தண்டனையை தீர்ப்பாக அளித்திருந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அஃப்ஸல் குருவின் கருணை மனு: குடியரசு தலைவர் திருப்பி அனுப்பினார்!"

Post a Comment