தலைப்புச் செய்தி

Monday, November 19, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டிசம்பர்மாதம் 15-ந்தேதி மின்உற்பத்தி தொடங்கும்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் 2 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கு முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீர் என்று அணுமின் நிலையத்தில் எதிர்த்து கூடங்குளம் சுற்று வட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் எரிபொருள் நிரப்பும் பணி தாமதமானது. இதனால் திட்டமிட்டப்படி மின் உற்பத்தி தொடங்க வில்ல. இதற்கிடையே அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை போலீசார் சமாளித்து முடிவுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அணு உலையில் யுரோனியம் எரிபொருள் நிரப்பும் நடந்து முடிந்து விட்டது. மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் ந நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணு உலையில் கடந்த அக்டோபர யுரோனியம் நிரப்பி பரிசோதனை தொடங்கப்பட்டது. உலக அளவிலான அணுசக்தி வல்லுனர்கள் இதை பார்வையிட்டு அனுமதி அளித்துள்ளனர். மேலும் நமது நாட்டின் அணு பாதுகாப்பு கழக வல்லுனர்களும் பார்வையிட்டு அனுமதி வழங்கி உள்ளனர். அதை தொடர்ந்து ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப வல்லுனர்கள் மேற்பார்வையில் வெப்ப காற்று செலுத்தப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. இந்த பரிசோதனைகள் முடிந்து அனேகமாக டிசம்பர் மாதம் 15-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கப்படும். 100 சதவீத மின் உற்பத்தியை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் கிடைக்கும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் 450 மெகாவாட் தமிழகத்திற்கு வழங்கப்படும். 37.5 மெகாவாட் புதுவைக்கும், 122 மெகாவாட் கேரளாவுக்கும், 225 மெகாவாட் கர்நாடகாவுக்கும் அனுப்பப்படும். மீதம் உள்ள மின்சாரம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும். இதில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை. தமிழக முதல்வர் 1000 மெகாவாட் மின்சாரமும் வேண்டும் என்று கேட்டுள்ளார். இது பற்றி நான் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று தான் கூறினேன். 2-வது அணு உலையில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. 3 அல்லது 4 மாதத்தில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கும். அதில் 950 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகும். அப்போது தமிழகத்திற்கு 2 அணு உலைகளிலும் சேர்த்து 950 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். புதுவைக்கு 67 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியா உதவியுடன் கட்டப்பட்டுள்ளதால் ரஷிய அதிபர் புதினை வைத்து திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதின் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் டெல்லியில் இருந்த படி பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டிசம்பர்மாதம் 15-ந்தேதி மின்உற்பத்தி தொடங்கும்"

Post a Comment