சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன .
இவ்வழக்கு குறித்த விசாரணை நேற்று எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின் டன் நாரிமன், "சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது பொருளாதார ரீதியிலோ, பூகோள ரீதியிலோ சாத்தியமானதல்ல என்று உயர் நிலைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசால் நியமிக்கப் ஆர்.கே.பச்சோரி கமிட்டி அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.இதன் மீது அரசு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பச்சேரி அறிக்கையை ஆராய்ந்து முடிவு செய்ய அரசுக்கு 8 வார அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments: on "சேது சமுத்திர திட்டம்-அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!"
Post a Comment