தலைப்புச் செய்தி

Monday, July 2, 2012

ஆதரவு திரட்ட ஆந்திரா சென்றார் பிரணாப் முகர்ஜி


ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக தனி விமானம் மூலம் ஆந்திரா சென்றார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்குகூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி,  ஆந்திரா  காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.


இந்த சந்திப்பிற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய பிரணாப், தனக்கு ஆதரவு தந்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதுவரை ஆதரவு தராத கட்சிகள் ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.


மற்றொரு வேட்பாளரான பி.ஏ.சங்மா அதிசியம் நிகழ்ந்தால், தான் ஜனாதிபதியாகலாம் என்று தெரிவித்துள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரணாப், அதிசியம் நிகழுமா என்பது குறித்து எனக்கு தெரியாது.


அதிசியங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆதரவு திரட்ட ஆந்திரா சென்றார் பிரணாப் முகர்ஜி"

Post a Comment