தலைப்புச் செய்தி

Monday, July 2, 2012

அப்பாவி அபு ஜின்டாலை அயோக்கியனாக மாற்றிய போலீஸ்!


ஒசாமா பின்லேடனை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்று சொல்லுவது உண்டு, அது போலவே சாதாரண எலெக்ட்ரீஷியனா வாழ்ந்துக்கொண்டிருந்த அபூஜிண்டால் என்ற சையத் ஸபீஉத்தீன் அன்ஸாரியை.
சர்வதேச குற்றவாளியாக சித்தரிக்கும் நிலைக்கு ஆளாக்கியதே உளவுத்துறை தான்,என்ற தகவல் இப்போது வெளிவந்துக்கொண்டிருக்கிறது.  பிறந்த ஊரான மராத்வாடாவில் எலக்ட்ரீசினியனாக வேலைப் பார்த்தவர் அபூ ஜிண்டால் என்ற அன்ஸாரி. காண்ட்ராக்டர்களுடன் பணியாற்றிய அன்ஸாரிக்கு போலீஸ் நிலையங்களில்தான் பெரும்பாலும் வேலை இருந்து வந்தது. அப்பொழுதுதான் அன்ஸாரி போலீஸ் மற்றும் உளவுத்துறையுடன் நெருக்கமானதாக கூறப்படுகிறது.  
குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையைத் தொடர்ந்து சிமி உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் நகர்வுகள் குறித்து, ஐ.பி மற்றும் உள்ளூர் போலீசாருக்கு அபூ ஜிண்டால் தகவல் அளித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   2006-ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி, அவரங்காபாத்தில் ஆயுதவேட்டை நடத்தப்பட்டது. டாட்டா சுமோவில் இருந்து  ஏ.கே 47 துப்பாக்கிகளும்,  வெடிப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.  ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஆயுத வேட்டை நடத்தப்பட்டதாக ஏ.டி.எஸ்.  துணை கமிஷனர் டி.எஸ்.தாவலே மஹராஷ்ட்ரா உள்துறைச் செயலாளருக்கு எழுத்து மூலம் தெரிவித்தார். இத்தகவல் உளவுத்துறைக்கு அன்ஸாரி மூலம் தான் கிடைத்துள்ளது.    அவுரங்காபாத் ஆயுத வேட்டைக் குறித்து தகவல் அளித்தவர் அன்ஸாரி(அபூ ஜிண்டால்). ஆனால் ஆயுத வேட்டை நடந்த வேளையில் MH 20 U 1240 என்ற காரில் தப்பிய இருவரில் ஒருவர், அன்ஸாரி என்று குழப்பமான தகவலை ஏ.டி.எஸ். கூறுகிறது. அன்று தப்பிய அன்ஸாரி, பங்களாதேஷ் வழியாக பாகிஸ்தானுக்கு சென்றாராம்.   இதில் என்ன பிரச்சனை என்றால் அபூ ஜிண்டால் தான் அன்ஸாரி என்பதை ஐ.பியோ, போலீஸோ அடையாளம் காணவில்லை.  
அமெரிக்க ஏஜன்சியான சி.ஐ.ஏ.தான் அபூ ஜிண்டாலை குறித்து கூடுதல் தகவல்களை இந்தியாவுக்கு அளித்துள்ளதாம். இந்நிலையில், அன்ஸாரி தான் அபூஜிண்டால் என்பதை கஸாப் அடையாளம் காட்டவேண்டும். அபூஜிண்டால், குரல் பதிவை அமெரிக்க ஏஜன்சிகள் இந்தியாவுக்கு அளித்துள்ளன. அதில் உள்ள சப்தமும், அன்ஸாரியின் குரலும் ஒன்றுதானா? என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அப்பாவி அபு ஜின்டாலை அயோக்கியனாக மாற்றிய போலீஸ்!"

Post a Comment