தமிழ்நாட்டு, நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53), இன்று காலை மர்மநபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
இன்று காலை நடை பயணம் சென்ற புகழேந்தியை ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்த தகவல் பொலிஸாருக்கு தெரிய வர, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருப்பினும் கொலையாளிகள் தப்பி விட்டனர். தற்போது இதுகுறித்த விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் புகழேந்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் பிணையில் வந்துள்ளார். இந்நிலையில் புகழேந்தி கொலை செய்யப்பட்டது பொலிஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
0 comments: on "பாஜக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை"
Post a Comment