அஹ்மதாபாத்:2002-ம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் பா.ஜ.க அமைச்சர் உள்பட 61 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜோல்ஸ்னா யத்னிக் நேற்று அளிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், தீர்ப்பை அவர் எவ்வித காரணமும் கூறாமல் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கூட்டுப் படுகொலைதான் நரோடா பாட்டியா படுகொலை. இவ்வழக்கில் நரேந்திர மோடி அரசில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான மாயாகோட்னானியும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு அழைப்பு விடுத்த முழு அடைப்பின் போது இந்த பயங்கரத்தை காவி பயங்கரவாதிகள் அரங்கேற்றினர்.
0 comments: on "நரோடா பாட்டியா:வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் ஒத்திவைப்பு!"
Post a Comment