குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்க்காக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் அத்வானியின் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த் சிங். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா அல்லது புதிய வேட்பாளரை நிறுத்துவதா என்று விவாதிக்கப் பட்டதாகத் தெரிகிறது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சரத் யாதவ் '' கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது யோசனைகளைத் தெரிவித்தன. முடிவு எடுக்க தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் பலரது கருத்துக்களையும் ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். இன்னும் ஒரு கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப் படும். தேவைப் பட்டால் பாஜக தலைவர் அத்வானி இது விசயமாக கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் பேசுவார். துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட வில்லை '' என்று தெரிவித்தார்.
பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் அதன் முக்கியக் கூட்டணிக் கட்சியான சிவசேனா கலந்து கொள்ள வில்லை.
0 comments: on "பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் - சிவசேனா புறக்கணிப்பு!"
Post a Comment