தலைப்புச் செய்தி

Tuesday, June 5, 2012

இடைத்தேர்தல் பிரசாரம்: ஆந்திராவில் வன்முறை


ஆந்திராவில் கடப்பா பகுதியில் ஜெகன் கட்சியினருக்கும், தெலுங்கு தேச கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
ஆந்திராவில் தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் ஆளும் காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.


சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிதலைவர் ஜெகன்மோகன்ரெட்டி கடப்பா எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் கடப்பா பகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீகாந்த் ரெட்டி பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இக்கட்சி தொண்டர்களுக்கும், தெலுங்குதேச கட்சித்தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.


வன்முறையை கலைக்க பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கடப்பா பகுதியில் பதட்டம் நிலவிவருகின்றது.
இதற்கிடையே முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், சிரஞ்சீவி ஆகியோர் இன்று பிசாரம் செய்‌ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இடைத்தேர்தல் பிரசாரம்: ஆந்திராவில் வன்முறை"

Post a Comment