மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அசாமில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி, 30 கிராமங்கள் தத்தளிக்கின்றன.
அசாமின் உதால்குரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளிகளிலும், உயரமான பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 30 கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன.
மழை - வெள்ளம் காரணமாக, உதால்குரி மாவட்டத்தில் உள்ள தொலை தூரப் பகுதியான பேர்கானுக்குச் சாலை வசதி துண்டிக்கப்படுள்ளது. வெள்ள நிலைமையை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
0
comments:
on "அசாமில் வெள்ளப்பெருக்கு: 30 கிராமங்கள் தத்தளிப்பு"
0 comments: on "அசாமில் வெள்ளப்பெருக்கு: 30 கிராமங்கள் தத்தளிப்பு"
Post a Comment