தலைப்புச் செய்தி

Saturday, March 24, 2012

ஈரானியர்கள் மீது பாசத்தை பொழியும் இஸ்ரேலியர்கள்


ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் போர் தொடுக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதை கைவிட வலியுறுத்தி இஸ்ரேலியர்கள் புதிய பேஸ்புக் பக்கம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் ரோனி எட்ரிஸ் மற்றும் மிசெல் தமிர் தம்பதியினர் கடந்த வாரம்தான் "Iranians, we love you" என்று ஒரு பக்கத்தை தொடங்கியிருந்தனர்.
இப்போது "Iranians, we love you" என்ற பக்கத்தை "லைக்" செய்கிறோம் என்று கிளிக் செய்திருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரம்.
எட்ரிஸ் தம்பதியினர் இது பற்றி கூறுகையில், நாங்கள் தனிப்பட்ட முறையில்தான் பேஸ்புக்கில் பதிவைத் தொடங்கினோம். "ஈரானியர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம்... நாங்கள் உங்கள் நாட்டின் மீது ஒருபோதும் குண்டுவீச மாட்டோம்" என்று அதில் பதிவு செய்திருந்தோம்.
இப்போது கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. எங்களது பக்கம் இத்தனை ஆயிரம் பேரை ஈர்த்திருக்கிறது என்பது நிச்சயம் நம்ப முடியாத ஒன்றுதான் என்கின்றனர்.
இருப்பினும் தொடக்கத்தில் தமது நண்பர்கள் பலரும் இது வேண்டாத வேலை என்று எச்சரித்ததாகவும் ஈரானியர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது எனவும் கூறினர். ஈரான் மீதான போரை உங்களால் தடுத்துவிட முடியாது என்றும் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வலைதளத்தில் ஈரானைச் சேர்ந்தவர்களும் கூட "இஸ்ரேலியர்களை நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை. வி லவ் யூ" என்று பதில் பதிவை வெளியிட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈரானியர்கள் மீது பாசத்தை பொழியும் இஸ்ரேலியர்கள்"

Post a Comment