தலைப்புச் செய்தி

Tuesday, March 13, 2012

இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு


புதுடெல்லி:இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாகோப் அமிட்ரார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார்.
இஸ்ரேல் தூதரக வாகனத்தில் நடந்த குண்டுவெடிப்பு விசாரணையின் முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு 50 நிமிடம் நடந்தது. ஆனால், இருவரும் என்ன பேசினோம்? என்பது குறித்து வெளியிட மறுத்துவிட்டனர்.
குண்டுவெடிப்பு தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் செய்யத் அஹ்மத் கஸ்மியை கைது செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு"

Post a Comment