| சங்கரன் கோவிலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். |
| கடந்த சட்டப் பேரவை தேர்தலில் சங்கரன் கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கருப்பசாமி, 2011 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22ம் திகதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பகரமாக சங்கரன் கோவில் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் ஜவகர் சூரியகுமார் (திமுக), முத்துச்செல்வி (அதிமுக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), முத்துக்குமார் (தேமுதிக), முருகன் (பாஜக), நாகேஸ்வரராவ் (சமாஜ்வாடி), கணேசன் (ஜனநாயக கட்சி) மற்றும் சுயேச்சைகள் உட்பட 13 வேட்பாளர்கள் நிற்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்தனர். தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் நீண்ட நாட்களாக இந்த தொகுதியிலேயே முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |





0 comments: on "சங்கரன் கோவிலில் வாக்குப்பதிவு தொடங்கியது"
Post a Comment