தலைப்புச் செய்தி

Sunday, January 8, 2012

முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி


ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கான விவகாரத்திற்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு நேர்தியான முறையில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்ட நேரங்களிலிருந்து இன்று வரை 15ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.


சென்ற வருடம் முஸ்லிம்கள் கொண்டாடிய ஹஜ்ஜுப் பெருநாள் பின்பு போவனபள்ளி, காச்சிகுடா, சிக்கடபள்ளி, எல்.பி. நகர், வித்யா நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய தாக்குதல்கள் ஒரு சில நாட்கள் இடைவெளியில் நடந்தேறியுள்ளது.

மக்கள் தெலுங்கான விவகாரத்தில் மூழ்கி போயிருந்த சமயம் தெருக்களில் உலா வந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களை மோட்டார் சைக்கிளில் வந்து பின்புறமாக கழுத்தில் வெட்டியுள்ளனர். பின்புறமாக வந்து எதிர்பாராத சமயம் தாக்குதலை நடத்துவதால் தங்களை அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

சமீபத்தில் ஹைதரபாத் நகரத்தை ஒட்டிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களை விசாரித்த மனித உரிமை கண்காணிப்பு குழு அரசாங்கத்திடம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொண்ட அமைப்பான ஹிந்து வாஹினி இது போன்ற தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாகவும் உடனே அவ்வமைப்பை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அக்குழுவின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மது  கான் கூறும்போது "வழக்கம் போல் அரசியல் ரீதியான பிரச்சனைகளை தனக்கு சாதமாக்கிக்கொண்டு ஹிந்தத்வ அமைப்பினர் இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவதால் ஆந்திர மாநிலத்தில் அரசியல் களத்தில் கால் பதித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்" என்று கூறினார்.



அவர் மேலும் கூறும் போது "மாநில காவல்துறை எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்களை மேற்கொண்டிருந்தாலும் ஹிந்தத்துவ அமைப்பினரால் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்திட இயலவில்லை. இதிலிருந்தே முஸ்லிம்களை தாக்குவதற்காக பிரத்யேகமாக பயிற்ச்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஹிந்துத்துவ அமைப்பினர் நடத்தும் பயிற்ச்சி முகாம்களில் இது போன்ற தாக்குதல்களை எவ்வாறு நிகழ்த்துவது என்ற பயிற்ச்சி அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்ச்சியை முடித்த பின்னர் அதனை செயல்முறை படுத்தவே இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்" என்று கூறினார்.

மனித உரிமை கண்காணிப்பு குழு அரசாங்கத்திற்கு விடுத்த கோரிக்கையில் "இவர்கள் இத்தகைய முகாம்களை முக்கிய நகரங்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்கள். மாநில அரசு இத்தகைய அமைப்புகளிடத்தில் மென்மையான அணுகுமுறையை கைவிட்டு அவர்கள் நடத்தும் முகாம்களையும், ஆர்.எஸ்.எஸ்  நடத்தும் ஷாகா வகுப்புக்களையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆந்திர மாநில முதலமைச்சருக்கு எழுதிய கடதத்தில் கூறும்போது "தங்கள் அரசு முஸ்லிம்களை பாதுகாக்கும் விஷயத்தில் தோல்வை அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஹைதரபாத் மாநகரின் டி.ஜி.பி மற்றும் கமிஷனர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் "ஹிந்தத்துவ தீவிரவாதம் மாநிலத்தில் வளர்ந்து வருவதாகவும் குறிப்பாக ஹைதரபாத மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் அடிலாபாத் அருகே ஒரு முஸ்லிம் குடும்பம் கொல்லப்பட்டதும், சித்திப்பேட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும், துர்கஷ்டமி அன்று முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் இரு பாதியாக கிழிக்கப்பட்டு மஸ்ஜித் முன்பு வீசப்பட்ட சம்வம் என அனைத்தும் சங்கப்பரிவார தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்பதை உறுதியாக கூற முடியும்.

இச்சம்பவங்கள் தொடர்பாக 40 நபரை காவல்துறையினர் கைது செய்ததாக அறிவித்தது ஆனால் காவல்துறையினரை தொடர்பு கொண்டு விசாரித்த போது முறையான பதில் கிடைக்கவில்லை. உண்மையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா? அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில்   கிடைக்கவில்லை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி"

Post a Comment