ஈரானில் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷன்(32) டெஹ்ரான் நகரில் கடந்த புதன்கிழமை காரில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த மர்ம ஆசாமி கார் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசினான்.
இதில் முஸ்தபா, இவரது பாதுகாவலர், வாகன ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரான் அரசியல்வாதிகள் கூறுகையில், முஸ்தபா படுகொலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் விஞ்ஞானியின் படுகொலைக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தீவரவாதம் என்ற பெயரில் யாரையும் படுகொலை செய்வது கடும் கண்டனத்துக்கு உரியது என்றார்.
0 comments: on "ஈரான் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை: பான் கி மூன் கண்டனம்"
Post a Comment