தலைப்புச் செய்தி

Saturday, January 7, 2012

சேது சமுத்திர திட்டம்: நிபுணர் குழு அறிக்கையை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


இந்தியாவில் பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டமாகும்.
இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும், வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.


சேது சமுத்திர திட்டம் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வந்த பகுதியான ஆறாவது வழித் தடத்தில் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் ராமர் பாலம் உள்ளதால் அங்கு கால்வாய் பணிகள் மேற்கொள்ள பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


மேலும் சேது சமுத்திரத் திட்டத்தால் ஆதாம் பாலம்-ராமர் பாலம் சேதப்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.


இதையடுத்து சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த சர்வதேச குழுமத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான ஆர்.கே. பச்செளரி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2008ம் ஆண்டு சூலை மாதம் நியமித்தார்.


இந்தக் குழுவினர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் தற்போது அந்த குழுவின் ஆய்வறிக்கையை சமர்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சேது சமுத்திர திட்டம்: நிபுணர் குழு அறிக்கையை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு"

Post a Comment