தலைப்புச் செய்தி

Saturday, January 14, 2012

அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு


கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
உள்நாட்டினருக்கு அதிகம் வேலை வழங்காத நிறுவனங்களுக்கு வரி சலுகை நிறுத்தப்படும் என்று ஒபாமா கூறியதால், அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.
அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டில் இந்த நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் முடிந்த பிறகு இதுபற்றி கணக்கெடுப்பு நடத்தியதில், வேலையில்லா திண்டாட்டம் மீண்டும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கான காப்பீடு தொகையை கேட்டு 3.99 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.
இதையடுத்து வேலைவாய்ப்பு தொடர்பான கொள்கைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமாறு அமெரிக்க நிறுவனங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் முதலீட்டை அதிகரிக்கும்படியும் கூறியுள்ளார்.
உள்நாட்டினருக்கு அதிகம் வேலைவாய்ப்பு வழங்காத அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்த அவர், இதுகுறித்த அறிவிப்புகள் ஒரு சில வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பணிகளை வெளிநாடுகளில் செய்து பெற்றுக் கொள்ளும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் இதனால் கலக்கம் அடைந்துள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு"

Post a Comment