திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கேரளாவில் இன்று பந்த் நடந்து வருகிறது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரளாவில் முல்லைப் பெரியாறு போராட்டக் குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கேரளா முழுவதும் இன்று பந்த் நடத்த இந்த குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்தப்படுகிறது. இதனால் கேரளா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகின்றன. இதையடுத்து தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்திற்கு கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் இடுக்கி மாவட்டத்தில் மட்டுமே பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் கேரளா வியாபாரிகள் சங்கம் இந்த போராட்டததி்ல் கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்துக்கு முஸ்லீம் லீக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி தலைவர் மஜீத் கூறிதாவது,
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது. தமிழ்நாட்டிலும் ஏராளமான மலையாளிகள் இருக்கிறார்கள். இங்கு ஏதாவது பிரச்சனை நடந்தால் அங்குள்ள மலையாளிகளை அது பாதிக்கும். இந்த பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 comments: on "முல்லைப் பெரியாறு: கேரளாவில் இன்று பந்த்-வியாபாரிகள் புறக்கணிப்பு"
Post a Comment