தலைப்புச் செய்தி

Wednesday, January 25, 2012

இனிமேல் பிரதமரை டுவிட்டரில் தொடரலாம்


இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். 

பத்திரிக்கையாளர் பங்கஜ் பச்சோரி பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இனி பிரமதர் மன்மோகன் சிங்கின் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது குறித்து தான் பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் முதன்முதலாக செய்தி வெளியிட்டது.

பிரதமரின் நிகழ்ச்சிகள் டுவிட்டரில் உடனுக்குடன் வெளியிடப்படும். http://twitter.com/indian_pm என்ற ட்விட்டர் முகவரியில் பிரதமர் அலுவலக அன்றாட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம். தொடங்கப்பட்ட சிலநாட்களுக்குள் இதுவரை 17,266 பேர் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கைத் தொடர்கிறார்கள்



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இனிமேல் பிரதமரை டுவிட்டரில் தொடரலாம்"

Post a Comment