தலைப்புச் செய்தி

Sunday, January 8, 2012

இந்தியக் கைதிகளை விடுதலை செய்த பாகிஸ்தான்


எல்லை தாண்டிய விவகாரத்தில் பாகிஸ்தான் சிறையில் வசித்த 185 இந்தியர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
புத்தாண்டு நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 185 இந்தியர்களை அந்நாடு விடுதலை செய்துள்ளது. அவர்கள் இன்று (8.1.2012) வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற குற்றத்திற்காக அந்நாட்டுச் சிறைகளில் நூற்றுக்கணக்கானோர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இருதரப்பு நல்லுறவு தொடர்பான பேச்சு வார்த்தையை அடுத்து சிறையில் இருப்போரை விடுவிக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அதன் அடிப்படையில் 179 இந்திய மீனவர்கள், இந்திய குடிமக்கள் 6 பேர் என மொத்தம் 185 பேர் கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு லாகூருக்கு அனுப்பப்பட்டனர்.


பின்பு லாகூரிலிருந்து பேருந்து மூலமாக வாகா எல்லைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று வாகா எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சட்டப்பூர்வமான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்தியக் கைதிகளை விடுதலை செய்த பாகிஸ்தான்"

Post a Comment