சிங்கப்பூரில் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறைந்தபட்சம் மூன்றிலொரு பங்கினால் இச்சம்பளங்கள் குறைக்கப்படவுள்ளன. எனினும் உலகில் அதிக சம்பளம் பெறும் அரசியல்வாதிகளாக சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் விளங்குவர். மே மாதம் முதல் இச்சம்பள வெட்டு அமுலுக்கு வரவுள்ளது.
பிரதமர் லீ செய்ன் லூங் கடந்த வருடத் தேர்தலில் சம்பள குறைப்புக்கு உறுதியளித்தார். இதன்படி அவரின் அடிப்படை சம்பளம் 36 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. இனி அவர் வருடாந்த சம்பளமாக 22 மில்லயின் சிங்கப்பூர் டொலர்களை (16.9 மில்லியன் அமெரிக்க டொலர்) சம்பளமாகப் பெறுவார்.
எனினும் வருடாந்தம் 4 லட்சம் டொலர் சம்பளத்தை பெறும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சம்பளத்தைவிட இது 4 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சம்பளத் திட்டத்தின்படி சிங்கப்பூர் ஜனாதிபதியின் சம்பளம் 51 சதவீதத்தினால் குறைக்கப்படும். இனி அவரின் சம்பளம் 1.54 மில்லியன் சிங்கப்பூர் டொலர்களாக இருக்கும்.
சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் முன்னர் வங்கி, கணக்கியல், பொறியியல், சட்டம், உற்பத்தி, பல்தேசிய கம்பனித் துறைகளில் அதிக சம்பளம் பெறும் நால்வரின் சராசரி சம்பளத்தின் மூன்றில் இரு பங்காக இருந்தது.
தற்போது சிங்கப்பூரில் அதிக சம்பளம் பெறும் 1000 பிரஜைகளின் சராசரி சம்பளத்தை ஆரம்பநிலை சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் சம்பளமாக பெறுவார். இத்தொகை 1.1 மில்லியன் சிங்கப்பூர் டொலர்களாக கணிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் விமர்சகரான ஜோர்ஜ் பிரவுன் என்பவர் அமைச்சர்களின் சம்பளத்தை ஆகக்குறைந்த சம்பளம் பெறும் 1000 பிரஜைகளின் சராசரி சம்பளத்திற்கேற்ப கணித்தால் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.





0 comments: on "சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு"
Post a Comment