இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம், வாகன உதிரி பாக தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து டெல்லி பிரகதி மைதானத்தில் 11வது சர்வதேச வாகன கண்காட்சியை நடத்துகின்றன.
முறைப்படி (7.1.2012) தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும் நேற்றே(5.1.2012) கண்காட்சி களைகட்டியது.
கண்காட்சியில் 25 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சுமார் 50 புதிய மாடல் வாகனங்கள் அறிமுகமாகின்றன. முதலாவதாக நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி, ‘எக்ஸ்ஏ ஆல்பா’(Suzuki xa Alpha) என்ற சிறிய மாடல் காரை நேற்று அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் மாருதி சுசூகி நிர்வாக இயக்கனர் ஷின்சோ நகநிஷி பேசுகையில், இந்திய கார் விற்பனை சந்தையில் சிறிய கார்கள் 14 சதவீத பங்கு வகிக்கின்றன. அதில் மாருதி 45 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது.
இளம் தலைமுறையை கவரும் வகையில் எக்ஸ்ஏ ஆல்பா கார் வெளிவந்துள்ளது. நடுத்தர வருமான பிரிவினர் மற்றும் அரசின் ஆதரவால் உலக வாகன பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ள போர்டு நிறுவனம் ‘எகோஸ்போர்ட்’ என்ற சிறிய மாடல் காரை வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது.
மேலும் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள போர்டு தொழிற்சாலையில் கூடுதலாக ரூ.750 கோடி முதலீடு செய்யப்படும் என்று அந்நிறுவன ஆசிய பசிபிக், ஆப்பிரிக்க பிரிவு துணை தலைவர் ஜோ ஹின்ரிச்ஸ் தெரிவித்துள்ளார். |
0 comments: on "டெல்லியில் வாகன கண்காட்சி களை கட்டியது: புதிய வாகனங்கள் அறிமுகம்"
Post a Comment