இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் இருந்து ராதாபுரம் வரை நடந்த இந்த பேரணியில் கூடங்குளம், இடிந்தகரை, பரமேஸ்வரபுரம், பெருமணல், விஜயாபதி, கூட்டப்புளி, வைராவிகிணறு, தோமையார்புரம், உவரி, கூத்தங்குளி, கூட்டப்பனை, கூடுதாழை, மணப்பாடு, செட்டிகுளம் உட்பட பல கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணிக்கு பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த லட்சுமி தலைமை தாங்கினார். பேரணியை கோவை பொன்சந்திரன் தொடங்கி வைத்தார். பேரணியாக வந்தவர்கள் ராதாபுரம் வந்ததும், அங்குள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆர்ப்பாட்டத்தை முடிவுசெய்து வைத்து பேசியதாவது: உலக வரலாற்றில் மக்கள் கோரிக்கைக்காக தொடர்ச்சியாக 150 நாட்கள் உண்ணாவிரதம் நடந்ததாக சரித்திரம் இல்லை.
தமிழ்மக்கள் தங்கள் உயிருக்காக இங்கே தொடர்ச்சியாக அறப்போராட்டம் நடத்தி வருகிறோம். அணுசக்கி கழகத்தினரின் பேச்சு வேடிக்கையாக உள்ளது. ஒவ்வொருவரும் வேறுவிதமான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.
கூடங்குளம் அணுஉலைகளில் பணிகள் தொடங்கப்படுமானால் அனைத்து தரப்பு மக்களும் குடும்பம் குடும்பமாக அணுஉலைகள் முன்பு மறியலில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். |
0 comments: on "அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் 150வது நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி"
Post a Comment