தலைப்புச் செய்தி

Wednesday, December 14, 2011

குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் – மோடி அரசுக்கு மேலும் பின்னடைவு


புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வழக்கில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு எதிராக உண்மைகளை வெளியிட்டதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா நிலபேர ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிரதீப் சர்மா நாட்டைவிட்டு வெளியேறாமல் இருக்க அவருடைய புகைப்படத்தை விமானநிலையத்தில் ஒட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பாஸ்போர்ட்டை அளிக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னர் குஜராத் உயர்நீதிமன்றம் சர்மாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அரசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பதிவுச்செய்து அளித்தார் என்பது சர்மா மீதான வழக்காகும். கடந்த 16 மாதங்களாக சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடக்கும் வேளையில் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என நரேந்திர மோடியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பிரதீப் சர்மா கூறியிருந்தார். தனது சகோதரர் ஐ.பி.எஸ் அதிகாரியான குல்தீப் சர்மாவிடம் தாக்குதலை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது கீழ் அதிகாரிகளுக்கு உத்தரவிட மோடியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்ற தகவலை பிரதீப் சர்மா வெளியிட்டார்.
வழக்கை விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் மோடியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதற்கான பழிவாங்கல் நடவடிக்கைதான் தன் மீதான நிலபேர ஊழல் வழக்கு என பிரதீப் சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.
குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடக்கும் வேளையில் பிரதீப் சர்மா ஜாம்நகர் நகராட்சி கமிஷனராக பதவி வகித்தார்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் – மோடி அரசுக்கு மேலும் பின்னடைவு"

Post a Comment