தலைப்புச் செய்தி

Saturday, December 3, 2011

லஞ்சம் வாங்கும் நாடுகளின் பட்டியல்: நியூசிலாந்து முதலிடம்

குறைந்த அளவில் லஞ்சம் வாங்கும் நாடுகள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.
லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அதிகளவில் லஞ்சம் வாங்கும் நாடுகளில் முதல் நிலையில் இருந்த டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகியன தற்போது முறையே 2வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன.
8வது இடத்தில் அவுஸ்திரேலியாவும், சுவிட்சர்லாந்தும் உள்ளன. டிஐ நிறுவனம், 183 நாடுகளில் லஞ்சம், பயங்கரவாதம் குறித்த 17 ஆய்வுகளை நடத்தியது.
குறைந்த அளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் நியூசிலாந்திற்கு 9.5 புள்ளிகளும், அவுஸ்திரேலியாவிற்கு 8.8 புள்ளிகளும், வடகொரியா மற்றும் சோமாலியா ஒரு புள்ளிகளும் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் 3.6 புள்ளிகளுடன் சீனா 75வது இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் ஜப்பான் 14வது இடத்தில் உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "லஞ்சம் வாங்கும் நாடுகளின் பட்டியல்: நியூசிலாந்து முதலிடம்"

Post a Comment