கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாள்.
அப்போது தொலைக்காட்சியில் இளவரசர் வில்லியம், கேட் அவர்களின் திருமண நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தாள்.
குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் The Children’s wish Foundationக்குத் தொடர்பு கொண்டு இளவரசத் தம்பதியரைப் பார்க்க விரும்புவதாக அந்த சிறுமி தெரிவித்தாள். அவள் ஆசை நிறைவேறியது. அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவளுக்குள் ஒரு பெரிய தூண்டுதல் ஏற்பட்டது.
அல்பெர்ட்டா சிறுவர் மருத்துவமனையில் இச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்பு நடத்தப்பட்ட திசுச் சோதனையில் அவளுக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது தெரியவந்தது. இத்தகவல் இளவரசத் தம்பதியினருக்கும் அனுப்பப்பட்டது, அவர்களும் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.
இச்சிறுமியின் தந்தை லையால் மார்ஷல், இளவரசத் தம்பதியரைச் சந்தித்தது இவளுக்கு ஓர் அற்புக சுகத்தை அளித்திருப்பதாகக் கூறினார்.
இளவரசுத் தம்பதியரும் இச்சிறுமி பூரண நலம் பெற்றதற்கு கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டின் இத்தருணத்தில் இது ஓர் அதிசயச் செய்தி, இனி வரும் புத்தாண்டிலும் நாங்கள் அவளை நினைத்துக் கொண்டிருப்போம் என்று கூறியுள்ளனர்.





0 comments: on "இளவரச தம்பதியினரால் உயிர் பிழைத்த கனடிய சிறுமி"
Post a Comment