இந்தியாவில், திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் 4 ல் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா திரும்ப பெறப்பட்டது.
இந்த லோக்பால் மசோதாவில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லோக்பாலில் இடஒதுக்கீடு செய்வது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்றத்துக்கு சென்றால் லோக்பால் நிற்காது என்றும் சுஷ்மா ஸ்வராஜ் வாதத்தில் ஈடுப்பட்டார்.
லோக்பால் மசோதா மீதான சுஷ்மா ஸ்வராஜின் கருத்துக்கு மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்து பேசுகையில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவது செல்லுமா என்பதை யாரும் ஆராய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் லோக்பால் அமைப்பில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தந்துள்ளதற்கு லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டம் இயற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது அல்ல என்றும் நாடாளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் உரிமை உள்ளதாகவும் லாலு தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.வலுவான லோக்பால் மசோதா மக்களவையில் வேண்டும் என்றும் லாலு பிரசாத் வலியுறுத்தியுள்ளார். |
0 comments: on "புதிய லோக்பால் மசோதா இன்று தாக்கல்: சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு"
Post a Comment