தலைப்புச் செய்தி

Saturday, December 31, 2011

இஸ்ரேலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ்


ஜெருசலேமிலும், மேற்குக் கரைப் பகுதிகளிலும் கட்டிடங்களைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஜெருசலேமின் நகராட்சிக்குழு பெரிய சுற்றுலா விடுதி ஒன்றைக் கட்டவும், யூதர்கள் தங்குவதற்கு 130 வீடுகள் கட்டவும் அனுமதி வழங்கியது.
பெத்லஹேம் நதரத்தின் அருகே யூதர்கள் தங்குவதற்காக 12 மாடிக் குடியிருப்புகள் மூன்று கட்டப்படும். இவற்றில் 130 வீடுகள் இருக்கும்.
பிரான்சின் வெளிவிவகாரத்துறை செய்தித் தொகுப்பாளர் பெர்னார்டு வலேரா கூறுகையில், கிழக்கு ஜெருசலேத்திலும், மேற்குக்கரையிலும் கட்டப்படவுள்ள இந்தக் கட்டிடங்கள் குறித்து பிரான்ஸ் அதிகம் கவலைப்படுகிறது.
பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படாத பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை உடனே இடித்துத் தள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மாதம் வடமேற்குக் கரையில் உள்ள இராணுவத் தளத்தைத் தாக்கியதாக சந்தேகப்பட்டு ஒரு சிறுவன் உட்பட ஆறு பேரை இஸ்ரேலியக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தப்பகுதியில் வந்து தங்கியவர்களும் தீவிரவலதுசாரி இயக்கத்தினரும் பாலஸ்தீனரையும், இஸ்ரேலிய ராணுவத்தையும் எதிர்த்து இது போன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இங்கு தங்கியிருப்போரை இஸ்ரேல் அரசு வெளியேற்ற முயல்வதால் இவர்கள் அரசின் மீது கோபம் கொண்டவர்களாக வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இஸ்ரேலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ்"

Post a Comment