சூடானில் பிறந்து கனடாவின் மொன்றியலில் வாழ்ந்து வந்த அப்துல் ரசீக் என்பவரை ஐ.நா பாதுகாப்பு குழு அல்கொய்தா ஆதரவாளர் என முத்திரை குத்தி காவலில் வைத்தது. தற்பொழுது அதை விலக்கிக் கொண்டுள்ளது.
சூடானுக்கு தன் தாயாரைப் பார்க்க சென்ற போது அப்துல் ரசீக் கைது செய்யப்பட்டார். CSIS என்ற கனடா பாதுகாப்பு புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களும், RCMP என்ற றொயல் கனடா மௌண்ட்டட் காவல்துறையினரும் இவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இப்போது இவர் பெயர் தீவிரவாதப் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டதால் இவருடைய சொத்து பரிவர்த்தனைகளை நிறுத்திவைத்தல், பயணத்தடை, ஆயுதத்தடை போன்ற தடைகளும் விலக்கப்பட்டது.
அமெரிக்கா இவரை 2006ம் ஆண்டு ஜீலை மாதத்தில் அல்கொய்தா ஆதரவாளராக குற்றம் சாட்டியது. இவர் தனக்கும், அல்கொய்தாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று CSIS மற்றும் FBI அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
CSISயின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சூடான் அதிகாரிகள் அப்துல் ரசீக்கை காவலில் வைத்து சித்ரவதை செய்ததாக இவர் கூறினார்.
மேலும் இக்காலகட்டத்தில் இவரது கடவுச்சீட்டும் காலாவதியாகிப் போனது. இவரை கார்ட்டோவும் என்ற ஊரில் உள்ள கனடா தூதரகத்தில் காவலில் வைத்தனர்.
ஆனால் கனடா இவரை கைது செய்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவந்தது. இவர் கடந்த 2009ம் ஆண்டு ஜீன் மாதம் கனடா திரும்பினார். அன்று முதல் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முயன்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments: on "ஐ.நா தீவிரவாதப் பட்டியலிலிருந்து கனடா தீவிரவாதி பெயர் நீக்கம்"
Post a Comment